ஜி.வி.பிரகாஷூடன் இணைந்த ப்ரியா ஆனந்த்!

ஜி.வி.பிரகாஷூடன் இணைந்த ப்ரியா ஆனந்த்!

செய்திகள் 1-Jun-2015 10:39 AM IST Chandru கருத்துக்கள்

‘டார்லிங்’, ‘பென்சில்’ படங்களைத் தொடர்ந்து தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். ஜி.வி.யே இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் வரும் 4ஆம் தேதி வெளியாகவிருக்கின்றன. இப்படத்தில் ஜி.வி.க்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக மனீஷா யாதவ் நடிக்கிறார். இவர்களுடன் சிம்ரன், விடிவி கணேஷ் ஆகியோரும் நடிக்கும் இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். கேமியோ ஃபிலிம்ஸ் இந்தியா நிறுவனம் தயாரிக்கிறது.

படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்திலிருக்கும் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’வில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதற்காக இணைந்திருக்கிறார் நடிகை ப்ரியா ஆனந்த். ஜி.வி.யுடன் இணைந்து நடித்தது குறித்து ட்வீட் மூலம் தனது சந்தோஷத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார். தலைப்பில் இரண்டு நாயகிகள், படத்தில் 4 நாயகிகள் என 6 நாயகிகள் இப்படத்தில் இடம்பிடித்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - டிரைலர்


;