சுந்தர்.சியின் ‘அரண்மனை 2’வில் சூரி!

சுந்தர்.சியின் ‘அரண்மனை 2’வில் சூரி!

செய்திகள் 1-Jun-2015 10:06 AM IST Chandru கருத்துக்கள்

சுந்தர்.சி படங்கள் என்றாலே காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படும். ஆரம்பத்தில் கவுண்டமணி, அதன்பிறகு வடிவேலு, அதனைத் தொடர்ந்து சந்தானம் என அவரின் படங்களில் எப்போதும் முன்னணி காமெடியன்களுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். சந்தானம் ஹீரோவாக மாறிய பிறகுகூட சுந்தர்.சி படம் என்பதால் ‘அரண்மனை’, ‘ஆம்பள’ போன்ற படங்களில் நடித்துக் கொடுத்தார். அந்தளவுக்கு காமெடியன்கள் சுந்தர்.சியின் படங்களில் நடிப்பதற்கு போட்டி போடுவார்கள். இப்போது இந்தப் பட்டியலில் சூரியும் இணைந்துவிட்டார்.

ஆம்... ஜூன் 15ஆம் தேதி முதல் படப்பிடிப்புக்கு செல்லவிருக்கும் ‘அரண்மனை’ 2ஆம் பாகத்தில் காமெடியனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் சூரி. சித்தார்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா என 3 கதாநாயகிகள் இதுவரை ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். கடைசி நேரத்தில் சந்தானமும் இப்படத்தில் இணையலாம் என்கிறார்கள். ‘ஆம்பள’ படத்தைத் தொடர்ந்து இப்படத்திற்கும் இசையமைக்கிறார் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;