இயற்கைச் சீரழிவை மையமாக வைத்து உருவாகும் படம்!

இயற்கைச் சீரழிவை மையமாக வைத்து உருவாகும் படம்!

செய்திகள் 1-Jun-2015 9:34 AM IST Chandru கருத்துக்கள்

ஹோலிமேன் ஃபிலிம்ஸ் சார்பில் அனில் கொட்டாரக்கரா தயாரிக்கும் படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார் பிரதீப் சுந்தர். இவர் மலையாளத்தில் முன்னணி இயக்குனர்களிடம் ஏற்கெனவே பணிபுரிந்திருக்கிறார். இயற்கைச் சீரழிவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ‘இரண்டு மனம் வேண்டும்’ எனப் பெயரிட்டுள்ளார்கள்.

நாயகனாக சஜி சுரேந்திரன், நாயகியாக சிலங்கா நடித்துள்ளார்கள். மோகன் சர்மா, அழகு, கிரேன் மனோகர், சீமாஜிநாயர், சாய்னா, ரிந்துரவி, அருள்மணி, மணிமாறன், 11 மாதசிறு குழந்தை ப்யோனா ஆகியோரும் நடித்துள்ளார்கள். வி.கே.பிரதீப் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தில் 3 பாடல்கள். இசை அறிமுகம் முகமது அலி, பாடல்கள்- வேல் முருகன்.

‘‘இப்படம் மலையாளத்தை விட தமிழில் வரவேற்பைப் பெறும். இப்போது தமிழில் வெறும் சண்டை, அடிதடி, பேய் என்றுதான் படங்கள் வருகின்றன. முழுமையான பாசம், காதல், நேசம் பற்றி தமிழில் யாரும் எடுக்க முயல்வதில்லை. ஆனால் அப்படிப்பட்ட படங்களை தமிழில் ரசிகர்கள் வரவேற்கத் தயங்கமாட்டார்கள். அந்த நம்பிக்கையில் எல்லாருக்கும் தெரிந்த ஒரு கதையை எடுத்துக் கொண்டு யதார்த்தமாகப் படமாக்கி இருக்கிறோம்‘‘ என்கிறார் இயக்குநர் பிரதீப் சுந்தர்.

நாகர் கோவில், விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் முப்பது நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்திருக்கிறார்கள். ஆகஸ்டில் வெளியிடும் நோக்கில் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;