த்ரிஷா, ஹன்சிகாவைத் தொடர்ந்து பூனம் பாஜ்வா!

த்ரிஷா, ஹன்சிகாவைத் தொடர்ந்து பூனம் பாஜ்வா!

செய்திகள் 1-Jun-2015 9:02 AM IST Chandru கருத்துக்கள்

‘சேவல்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. அதனைத் தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, எதிரி எண் 3 என அவர் நாயகியாக நடித்து ஒரு சில படங்கள் வெளிவந்தன. தற்போது ஜெயம் ரவியின் ‘ரோமியோ ஜூலியட்’டில் ஹன்சிகாவுடன் இணைந்து இன்னொரு நாயகியாக பூனம் பாஜ்வாவும் நடிக்கிறார். தவிர இந்த வருட பொங்கலுக்கு வெளிவந்த சுந்தர்.சியின் ‘ஆம்பள’ படத்தில் விஷாலுடன் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடினார்.

சுந்தர்.சியுடன் கிடைத்த அந்த நட்பின் மூலம் தற்போது அவரது அடுத்த படமான ‘அரண்மனை’ 2ஆம் பாகத்திலும் மூன்று நாயகிகளுள் ஒருவராக பூனம் பாஜ்வா இடம்பிடித்துவிட்டார். சித்தார்த் நாயகனாக நடிக்கவிருக்கும் இப்படத்தில் ஏற்கெனவே த்ரிஷா, ஹன்சிகா ஆகியோர் நாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டார்கள். த்ரிஷாவுடன் இணைந்து தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகிவரும் ‘போகி’ படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார் பூனம் பாஜ்வா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;