இருவர் ஒன்றானால் – விமர்சனம்

‘இருவர் ஒன்றானால்’ குதூகலம் தான்!

விமர்சனம் 30-May-2015 1:51 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Anbu.G
Starring : P.R.Prabhu, Krithika Malini, Deekshitha, Sharvya,
Music : Guru Krishnan
Cinematography : Kumar Sridhar
Editing : Paramesh Krishna
Production : Ramana Arts

முற்றிலும் புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி இருக்கும் இந்த படம் என்ன சொல்ல வருகிறது?

கதைக்களம்
தன்னிடம் காதலை சொல்லும் பெண்களையெல்லாம் தோழியாக்கிக் கொள்கிறார் ஹீரோ பிரபு. இப்படி நிறைய பெண்களை தவிர்க்கும் பிரபுவிற்கு எதிர்பாராமல் சாலையில் சந்திக்கும் கிருத்திகா மாலினி மீது திடீரென்று காதல் வருகிறது. அவளை தேடி அலைந்து கண்டு பிடித்து, அவளிடம் காதலை சொன்னால் அவள் காதலுக்கு ‘நோ’ சொல்கிறார். பிறகு கிருத்திகா மாலினிக்கு எப்படி பிரபு மீது காதல் வருகிறது என்பதை சொல்லும் படமே ‘இருவர் ஒன்றானால்’.

படம் பற்றிய அலசல்
தன்னை தேடி எப்போதும் வரும் ஒருவர் திடீரென்று வராமல் போகும்போது, அதை எதிர்பார்க்க தொடங்கும் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் இயல்பான மனநிலை எப்படி பிறகு காதலாக மாறுகிறது என்ற சைக்காலஜியை கதையாக அமைத்து இப்படத்தை படமாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் அன்பு.ஜி. சாதாரண ஒரு காதல் கதை தான், அதை இரண்டு மணி நேரம் போரடிக்காமல் தந்திருக்கிறார். அதற்கு குரு கிருஷ்ணனின் இசையும், குமார் ஸ்ரீதரின் ஒளிப்பதிவும் பக்க பலமாக அமைந்துள்ளன. ஆனால் ஒரு சில இடங்களில் சில குறைகளும் இருக்கதான் செய்கின்றன. உதாரணம், சொல்லி வைத்த மாதிரி எல்லா பெண்களும் பிரபுவிடம் காதலை சொல்வதும், அந்த பெண்களை எல்லாம் அவரது நண்பர்களே காதலிப்பதும் மாதிரியாக வரும் காட்சிகள்! கிளைமேக்சில் கிருத்திகா நளினி தனது தற்கொலை முடிவை சொல்லிவிட்டு ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்து விட, அதனால் ஏற்படும் களேபரம், பரபரப்பு, கடைசியில் அவர் உயிருடன் வது நிற்கும்போது ஏற்படும் குபீர் சிரிப்பு... இப்படி படம் முழுக்க நிறைய யதார்த்தமான சம்பவங்களை காட்சிப்படுத்தியிருக்கிற இயக்குனருக்கு ஒரு சபாஷ் போடலாம்! டாஸ்மாக் பாடல், அதிரடி சண்டை காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் ஆகியவை இல்லாமலும் ரசனையான படத்தை தரமுடியும் என்பதற்கு இப்படம் ஒரு சான்று!

நடிகர்களின் பங்களிப்பு
நடித்திருப்பவர்கள் அத்தனை பேரும் புதுமுகங்களே என்றாலும் அந்த குறை படத்தில் தெரியவில்லை! குறிப்பாக பிரபு - கிருத்திகா மாலினி ஜோடி! நிஜத்திலும் காதலர்களாக இருந்து இல்லறத்திலும் இணைந்துள்ள இருவரது நடிப்பும் யதார்த்தம்! பிரபுவின் அம்மா, எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருக்கும் தங்கை என எல்லோருமே சரியான தேர்வு!

பலம்
1.எடுத்துக்கொண்ட கதையை இயல்பான காட்சிகளுடன் ரசிக்கும்படி சொல்லியிருக்கும் விதம்.
2. கதையை மீறாத ஒளிப்பதிவும், இசையும்.
3. சண்டை காட்சிகள், குத்துப் பாட்டு போன்ற கமர்ஷியல் விஷயங்களை நம்பாமல் கதையுடன் பயணித்திருப்பது
.
பலவீனம்
1. நம்ப முடியாத ஃப்ளாஷ் பேக் காட்சிகள்
2. மெதுவாக பயணிக்கும் முன் பாதி திரைக்கதை
3. மனதை கவராத பாடல் காட்சிகள்

மொத்தத்தில்
இளம் உள்ளங்களின் இயல்பான குறும்புகள், காதல், கலாட்டா என பயணிக்கும் இப்படம் குறிப்பாக இளம் வட்டத்தினரை கவரும் படமாக அமைந்துள்ளது

ஒருவரி பஞ்ச் :‘இருவர் ஒன்றானால்’ குதூகலம் தான்!

Rating: 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நகர்வலம் - டீசர்


;