‘கயல்’ ஜோடியின் அடுத்த படம்!

‘கயல்’ ஜோடியின் அடுத்த படம்!

செய்திகள் 30-May-2015 1:51 PM IST VRC கருத்துக்கள்

‘கயல்’ படத்தில் ஹீரோ, ஹீரோயினாக நடித்த சந்திரன், ஆனந்தி மீண்டும் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள். இந்த படத்தை ‘சாட்டை’ படத்தை இயக்கிய அன்பழகன் இயக்குகிறார். ‘ஃபைசல்’ என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை பிரபு சாலமன் தயாரிக்கிறார். பிரபு சாலமனின் ஆஸ்தான இசை அமைப்பாளர் டி.இமான் தான் இப்படத்திற்கும் இசை அமைப்பாளர்! முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் வாரம் துவங்கவிருக்கிறது. கல்வியை கருவாக வைத்து ‘சாட்டை’ படத்தை இயக்கிய அன்பழகன் இப்படத்திலும் சமூகத்திற்கு தேவையான நல்ல ஒரு கருத்தை வைத்துள்ளாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என் ஆளோட செருப்ப காணோம் - டீசர்


;