சரண் உதவியாளர் இயக்கும் ‘பேய்கள் ஜாக்கிரதை’

சரண் உதவியாளர் இயக்கும் ‘பேய்கள் ஜாக்கிரதை’

செய்திகள் 30-May-2015 11:28 AM IST VRC கருத்துக்கள்

பேய் பட வரிசையில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் ‘பேய்கள் ஜாக்கிரதை’. இயக்குனர் சரணிடம் இணை இயக்குனராக பணியாற்றியவரும், தெலுகில் ‘நா ஊப்பிரி’, ‘கால் சென்டர்’ மற்றும் சமீபத்தில் வெளியாகி வெற்றிப் பெற்ற “பீருவா” உள்ளிட்ட பல படங்களை இயக்கிய கண்மணி முதன் முறையாக இப்பட்த்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

‘பேய்கள் ஜாக்கிரதை’ படத்தில் ஜீவரத்னம் கதாநாயகனாகவும், ஈஷான்யா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இவ்வுலகில் பேய்கள் இருக்கிறது என்று நம்பும் ஒரு கதாபாத்திரமும், பேய்கள் உள்ளது என்று கூறுபவன் மூடன் என்று கூறும் ஒரு கதாபாத்திரமும் ஒரு கட்டத்தில் சந்திக்க நேர்கிறது.

இவ்விருவரையும் இணைக்கும் வண்ணம் ஒரு சம்பவம் நடைபெறுகிறது. அந்த சம்பவம் எதனால் நடைபெறுகிறது. சம்பவத்திற்கு பின் அவர்கள் படும் குழப்பங்கள் நகைச்சுவை பிண்ணனியுடன் கலந்து கூறியிருக்கும் படமே ‘பேய்கள் ஜாக்கிரதை’ஸ்ரீ சாய் சர்வேஷ் என்டர்டெயின்மென்ட் சார்பாக ஜி.ராகவன் இப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்திற்கு மரியா ஜெரால்ட் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிகை - டிரைலர்


;