அபிநயா கதாநாயகியாக நடிக்கும் படம்!

அபிநயா கதாநாயகியாக நடிக்கும் படம்!

செய்திகள் 30-May-2015 11:28 AM IST VRC கருத்துக்கள்

அபிநயா ஹீரோயினாக நடிக்கும் படம் ’துடி’. வித்தியாசமான கதைகளத்தில் உருவாகும் படமாம் இது. ‘மைன் டிராமா’ என்ற பட நிறுவனம் சார்பாக ரிதுன் சாகர், G.லஷ்மி இருவரும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் அபிநயாவுடன் சுமன், பிரமானந்தம், ‘சூது கவ்வும்’ ரமேஷ், நளினி, இன்னொரு நாயகியாக பிரேர்னா ஆகியோர் நடிக்கிறார்கள். சென்னை கமலா தியேட்டர் அதிபர் சிதம்பரத்தின் மகன் கணேஷ் அமைச்சர் வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை எழுதி இயக்கும் ரிதுன் சாகர் யாரிடமும் உதவியாளராக இல்லாமல் குறும்படங்களை இயக்கிய அனுபவத்தோடு இப்படத்தை இயக்குகிறார். படம் குறித்து இயக்குனர் ரிது சாகர் கூறும்போது,

‘‘ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் நடக்கும் டெரரிஸ்ட் அட்டாக் தான் கதை! மாலை 6 மணிக்கு துவங்கி காலை 6 மணிக்குள் நடக்கும் சம்பவங்கள் தான் படம். அந்த காலகட்டத்தில் உருவான மிஸ் கம்யூனிகேஷன் தான் கதையின் மையக்கரு. அபிநயா ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட் ஆக நடிக்கிறார். விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பு இப்படத்தின் ஹைலைட்டாக இருக்கும்’’ என்றார்.இப்படத்திற்கு நடாஷா ஆதித்யா இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;