‘தலைவாசல்’ விஜய்யின் புதிய அவதாரம்!

‘தலைவாசல்’ விஜய்யின் புதிய அவதாரம்!

செய்திகள் 30-May-2015 11:28 AM IST VRC கருத்துக்கள்

‘டி.என்.எஸ்.தேவர் ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பாக டி.என்.எஸ்.செல்லத்துரை தேவர் தயாரிக்க, கே.பி.செல்வம் இணை தயாரிப்பில் உருவாகும் படம் ’அபூர்வ மகான்’. இப்படத்தில்
‘தலைவாசல்’ விஜய் சாய்பாபா வேடமேற்று நடிக்கிறார். இவருடன் இளம் நாயகனாக சாய்முரளியும், நாயகியாக ரஞ்சனியும், முக்கியமான ஒரு வேடத்தில் வினுசக்கரவர்த்தியும் நடிக்கிறார்கள். இந்த படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் கே.ஆர்.மணிமுத்து படம் குறித்து கூறும்பொது,

‘‘பாபாவின் அபூர்வ செயல்களை பற்றி நிறைய பேர் நிறைய சம்பவங்களை சொல்வார்கள். அவர் வாழ்கையையும், இன்றைய காலகட்டத்தையும் இணைத்து இப்படத்தின் கதை உருவாக்கப் பட்டுள்ளது. இப்படத்தை பார்க்கிற யாருமே உணர்ச்சிவசப் படாமல் இருக்க முடியாது. ஒரு கதாபாத்திரத்திற்காக வினுசக்கரவர்த்தியை பார்க்க போனோம். அவரால் நடக்கவே முடியாது எப்படி நடிக்க வைப்பீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். நான் போனபோது அவர் படுக்கையில் படுத்திருந்தார். நான் அவரது கதாபாத்திரத்தை சொல்லி விட்டு, பாபா உங்களுக்கு நல்லதே செய்வார் என கூறிவிட்டு வந்தேன்.
சில நாட்கள் கழித்து அவரே ஃபோன் செய்து படப்பிடிப்பு தேதியையும், இடத்தையும் கேட்டார். சொன்னேன் அந்த தேதியில் அவரே காரை விட்டு இறங்கி நடந்து வந்து நடித்துக் கொடுத்தார். டப்பிங்கும் அவரே பேசினார். நடக்கவே முடியாதவர் பாபாவின் ஆசியால் நடித்தது அபூர்வம் தானே! பணம் எதுவுமே வாங்கவில்லை அவர்! நிஜமாய் நடந்த அந்த சம்பவம் எங்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தித் தந்தது’’ என்றார் இயக்குனர் கே.ஆர்.மணிமுத்து. இந்த படத்திற்கு தஷி இசை அமைத்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;