தயாரிப்பாளர்களின் இயக்குனருக்கு இன்று பிறந்த நாள்

தயாரிப்பாளர்களின் இயக்குனருக்கு இன்று பிறந்த நாள்

செய்திகள் 30-May-2015 11:09 AM IST VRC கருத்துக்கள்

1990-ல் ‘புரியாத புதிர்’ எனும் படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கே.எஸ்.ரவிகுமார். கடந்த 25 வருட காலத்தில் தமிழ் ஹிந்தி என 35 திரைப் படங்களுக்கும் மேல் இயக்கியுள்ள கே.எ.ஸ்.ரவிகுமாரை தயாரிப்பாளர்களின் இயக்குனர் என்று அழைக்கப்படுவதுண்டு. இதற்கு காரணம் இவர் தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை உணர்ந்து திட்டமிட்டு படமெடுத்து ஜெயிக்க வைப்பதில் கெட்டிக்காரர். இவர் இயக்கத்தில் வெளிவந்த பெரும்பாலான திரைப்படங்களும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவருக்கும் லாபத்தை ஈட்டித் தந்த படங்களாக அமைந்திருக்கின்றன! ரஜினி நடித்த ‘லிங்கா’வை தொடர்ந்து தற்போது ’நான் ஈ’ புகழ் சுதீப் நடிக்கவிருக்கும் படத்தின் வேலைகளில் படு பிசியாக இயங்கி வரும் கே.எஸ்.ரவிகுமார் பிறந்த நாள் இன்று! இந்த இனிய நாளில் அவருக்கு வாழ்த்துக்களை சொல்வதில் ‘டாப்10 சினிமா’ பெருமிதம் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - டீசர்


;