ஜூன் 19-ல் வெளியாகும் இரண்டு படங்கள்!

ஜூன் 19-ல் வெளியாகும் இரண்டு படங்கள்

செய்திகள் 30-May-2015 10:59 AM IST VRC கருத்துக்கள்

‘டிமான்டி காலனி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அருள்நிதி ஹீரோவாக நடித்துள்ள ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’ என்ற படமும் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. அறிமுக இயக்குனர் என்.ஜே.ஸ்ரீகிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இப்படம் காமெடி என்டர்டெயின்மென்ட் படமாக உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது. ‘லியோவிஷன்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை அடுத்த (ஜூன்0 மாதம் 19- ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். பல திரைப்பட விழாக்கலில் கலந்துகொண்டு பல விருதுகளை வாங்கி குவித்துள்ள ‘குற்றம் கடிதல்’ படமும் ஜூன் 19 அன்று திரைக்கு வருகிறது. பிரம்மா.ஜி இயக்கியுள்ள இப்படத்தில் மாஸ்டர் அஜய், ராதிகா பிரசித்தா முக்கிய கேரக்டர்களில் நடிக்க. இப்படத்தை ஜே.சதீஷ்குமார், கிரிஸ்டி சிலுவப்பன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'டிமான்டி காலனி' டிரைலர்


;