இந்தியாவிலேயே முதல்முறையாக... ‘காஷ்மோரா’வின் புதிய முயற்சி!

இந்தியாவிலேயே முதல்முறையாக... ‘காஷ்மோரா’வின் புதிய முயற்சி!

செய்திகள் 29-May-2015 3:29 PM IST Chandru கருத்துக்கள்

இந்தியா சினிமாவில் டெக்னிக்கலாக புதுப்புது விஷயங்களை அறிமுகப்படுத்துவதில் பாலிவுட்டைவிட கோலிவுட் எப்போதுமே ஒரு படி மேலே நிற்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏற்கெனவே சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கிய ‘அஞ்சான்’ படத்தில் ரெட் டிராகன் கேமராவை முதல்முறையாகப் பயன்படுத்தி ஆச்சரியப்படுத்தினார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். இப்போது கார்த்தி நடிக்கும் ‘காஷ்மோரா’ படத்திலும் இந்திய அளவில் முதல் முறையாக புதிய டெக்னாலஜி ஒன்றை அறிமுகப்படுத்துகிறார்கள்.

‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ கோகுல் இயக்கத்தில் உருவாகும் ‘காஷ்மோரா’ படத்தில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார் கார்த்தி. நயன்தாரா, ஸ்ரீதிவ்யா என இரண்டு நாயகிகள் நடிக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் சில குறிப்பிட்ட காட்சிகளை படமாக்குவதற்காக 360 டிகிரிகள் சுழலும் ‘ஆம்னி டைரக்ஷனல்’ கேமரா ரிக் ஒன்றை பயன்படுத்துகிறார்கள். முதலில் மேற்படி காட்சிகளுக்கு சிஜி செய்து கொள்ளலாம் என முடிவெடுத்திருந்தார்களாம். பின்னர் 360 டிகிரிகள் சுழலும் கேமரா டெக்னிக் பற்றித் தெரிந்ததும் அந்த டெக்னாலஜி முதல்முறையாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ‘காஷ்மேரா’ டீம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;