இயக்குனருக்கு சாதகமாக அமைந்த ‘ஜிகர்தண்டா’ வழக்கு!

இயக்குனருக்கு சாதகமாக அமைந்த ‘ஜிகர்தண்டா’ வழக்கு!

செய்திகள் 28-May-2015 5:31 PM IST Chandru கருத்துக்கள்

சித்தார்த், பாபி சிம்ஹா, லக்ஷ்மிமேனன் நடிப்பில் ‘பீட்சா’ கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய ‘ஜிகர்தாண்டா’ படத்தை ‘பைவ் ஸ்டார்’ எஸ்.கதிரேசன் தயாரித்தார். இப்படத்திற்கான சம்பள அக்ரிமென்ட் போடும்போது இயக்குனருக்கு சம்பளம் போக, ஹிந்தி பதிப்பு உரிமையின் 40 சதவிகித பங்குகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டதாம். இப்போது ‘ஜிகர்தண்டா’ படத்தின் ஹிந்தி உரிமையை தன்னிடம் தெரிவிக்காமலேயே தயாரிப்பாளர் கதிரேசன் விற்க முயல்வதாக சில நாட்களுக்கு முன்பு கார்த்திக் சுப்பாராஜ் குற்றம் சாட்டியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அதில் சுமூக உடன்பாடு ஏதும் ஏற்படாததைத் தொடர்ந்து கதிரேசன் மேல் இந்த விவகாரம் தொடர்பாக கார்த்திக் சுப்பாராஜ் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கில் தற்போது கார்த்திக் சுப்பாராஜுக்கு சாதகமாக நீதிமன்றம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ‘‘ஜிகர்தண்டா படத்தின் மொழிமாற்று உரிமையை விற்க ஜூன் 15, 2015 வரை தடை விதித்துள்ளது. அதோடு எஸ்.கதிரேசன் தரப்பு அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளதாக இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் பத்திரிகை செய்தி ஒன்று வெளியிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - என்ன நான் செய்வேன் பாடல் வீடியோ


;