காதல் அரசியலாகும் வெள்ளை உலகம்!

காதல் அரசியலாகும் வெள்ளை உலகம்!

செய்திகள் 28-May-2015 1:49 PM IST VRC கருத்துக்கள்

‘ஆன்டி வைரஸ் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற புதிய பட நிறுவனம் சார்பில் சுஷில்குமார் ஜெயின், கே.ஜி.ரவீந்திரன், ஹசன், சத்திய மூர்த்தி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘வெள்ளை உலகம்’. ‘ரெட்டச்சுழி’, ‘தா’ ஆகிய படங்களில் உதவி கலை இயக்குனராகவும், மலேசிய தமிழ் படமான ‘திணறல்’ என்ற படத்தை இயக்கியவருமான் உதயா ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் புதுமுகங்கள் ரோஷன், ஐரின் நிரோஷா கதாநாயகன், கதாநாயகியாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் இன்னொரு கதாநாயகியாக காவ்யா மற்றும் அப்புக்குட்டி, தீப்பெட்டி கணேசன்,காதல் சுகுமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.
‘‘ ஜாதியின் பெயரால் ஒரு இளம் ஜோடியின் காதல் எப்படி அரசியலாகிறது? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன, அதன் முடிவு என்ன? என்பது தான் இப்படத்தின் ஒரு வரி கதை’’ என்கிறார் இப்படத்தை இயக்கியிருக்கும் உதயா ராமகிருஷ்ணன்.

ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் இப்படத்திற்கு அறிமுக இசை அமைப்பாளர் ஜெய்கிருஷ் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று காலை சென்னை கமலா தியேட்டரில் நடைபெற்றது. ஆடியோ சி.டி.யை நடிகர் ராதாரவி வெளியிட, நடிகரும், இயக்குனருமான கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார். இவர்கள் தவிர இவ்விழாவில் எழுத்தாளர் பிரபஞ்சன், இயக்குனர் மனோஜ் குமார், நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், ஒளிப்பதிவாளர் ‘வைட் ஆங்கிள்’ ரவிசங்கர் மற்றும் பலர் கலந்துகொண்டு ‘வெள்ளை உலகம்’ படக் குழுவினரை வாழ்த்திப் பேசினர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

முப்பரிமாணம் சொக்கி போறாண்டி வீடியோ பாடல்


;