செல்வராகவன் படத்தில் போலீசாகும் டாப்ஸி!

செல்வராகவன் படத்தில் போலீசாகும் டாப்ஸி!

செய்திகள் 28-May-2015 1:29 PM IST VRC கருத்துக்கள்

அதிரி புதிரி வெற்றி பெற்ற ‘காஞ்சனா’ மற்றும் ‘வை ராஜா வை’ படங்களை தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் டாப்ஸி. சிம்பு கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். அவர்களில் ஒருவர் டாப்ஸி! இன்னொரு ஹீரோயின் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் படப்பிடிப்பு துவங்கிய இப்படத்தில் டாப்ஸிக்கு போலீஸ் ஆஃபீசர் கேரக்டராம்! அதனால் நிறைய ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டி இருப்பதால் அதற்காக பிரத்தியேக பயிற்சி எடுத்து வருகிறாராம் டாப்ஸி. செல்வராகவன், சிம்பு முதன் முதலாக கூட்டணி அமைத்திருக்கும் இப்படத்திற்கு செல்வராகவனின் ஆஸ்தான இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தான் இசை அமைப்பாளர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;