நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் போட்டி?

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் போட்டி?

செய்திகள் 28-May-2015 12:02 PM IST Chandru கருத்துக்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடப் போவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார். புதுக்கோட்டையில் உள்ள முத்தமிழ் நாடக நடிகர்கள் சங்கத்திற்கு சென்ற விஷால், அங்கே நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கென புதிய கட்டிடம் கட்டப்போவதாக பதவியில் இருப்பவர்கள் வெறும் அறிக்கை மட்டுமே வெளியிட்டுக் கொண்டிருப்பதாகவும், ஆனால் அதற்கான வேலைகள் எதையும் துவங்கவில்லை எனவும், இதனால் வரும் சங்கத் தேர்லில் தான் கலந்து கொள்ளவிருப்பதாகவும் நடிகர் விஷால் கூறினார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய தலைவராக சரத்குமாரும், பொதுச் செயலாளராக ராதாரவியும் பதவி வகிக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;