‘ஐ’ பட லொகேஷனில் விஜய் - அட்லி படம்?

‘ஐ’ பட லொகேஷனில் விஜய் - அட்லி படம்?

செய்திகள் 28-May-2015 11:08 AM IST Chandru கருத்துக்கள்

இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான ஷங்கரின் ‘ஐ’ படத்தில் வரும் லொக்கேஷன்கள் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்டது. குறிப்பாக விக்ரம், எமி ஜாக்ஸன் விளம்பரப் படப்பிடிப்பில் கலந்துகொள்வது போன்ற காட்சிகள் சீனா சென்று படமாக்கப்பட்டது. இந்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நடிகர் விஜய்க்கும் ‘ஐ’ படத்தின் சீனக் காட்சிகள் மிகவும் பிடித்துப்போகவே, அந்த இடங்களில் தன் படத்தின் படப்பிடிப்பையும் நடத்த வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். இந்த ஆசையை இயக்குனர் அட்லியிடம் தெரிவிக்க, அட்லியும் டபுள் ஓகே சொல்லியுள்ளார்.

தற்போது ‘புலி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிலிருக்கும் விஜய், ஜூலை இறுதியில் அட்லி இயக்கும் ‘விஜய் 59’ படத்தில் கலந்து கொள்கிறார். இப்படத்தின் பாடல் காட்சிகளுக்காக விஜய், ஹீரோயின் சமந்தா உள்ளிட்ட அட்லி படக்குழு சீனாவுக்கு பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;