ஈழத்தமிழராக நடிக்கும் சூர்யா!

ஈழத்தமிழராக நடிக்கும் சூர்யா!

செய்திகள் 28-May-2015 11:01 AM IST Chandru கருத்துக்கள்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‘மாஸ்’ படம் நாளை உலகமெங்கும் ரிலீஸாகிறது. தமிழகத்தில் மட்டும் 450 திரையரங்குகளுக்கும் மேல் ரிலீஸாகவிருக்கும் இப்படத்தின் முன்பதிவுகள் தொடங்கி பரபரப்பாக போய்க் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இப்படத்தில் ஹீரோ சூர்யாவின் கேரக்டர் குறித்து வெங்கட் பிரபு இன்று புதிய தகவல் ஒன்றை ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.

‘மாஸ்’ படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும், அதில் ஒரு கேரக்டர் ஈழத்தமிழர் கேரக்டர் எனவும் வெங்கட்பிரபு கூறியிருக்கிறார். இப்படத்தில் நயன்தாரா, ப்ரணிதா என இரண்டு நாயகிகள் நடிப்பது ஏற்கெனவே அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்ற செய்தி ரசிகர்களுக்கு கடைசிநேர சர்ப்ரைஸாக அமைந்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

R K நகர் - டீசர்


;