சஞ்சிதா ஷெட்டியின் ‘எலி’ டான்ஸ்!

சஞ்சிதா ஷெட்டியின் ‘எலி’ டான்ஸ்!

செய்திகள் 28-May-2015 10:56 AM IST Chandru கருத்துக்கள்

‘சூது கவ்வும்’ புகழ் சஞ்சிதா ஷெட்டி ‘வில்லா’ படத்திற்குப் பிறகு தற்போது ‘என்னோடு விளையாடு’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அருண் கிருஷ்ணசாமி இயக்கும் இப்படத்தில் பரத், ‘மதயானைக்கூட்டம்’ கதிர், சஞ்சிதா ஷெட்டி, சாந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்படத்திற்காக சமீபத்தில் சஞ்சிதா ஷெட்டியின் பாடல் ஒன்று படமாக்கப்பட்டது.

பாழடைந்த பங்களா ஒன்றில் எலிகள் அங்குமிங்கும் ஓட அதற்கு நடுவே சஞ்சிதா நடித்தாராம். இந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டபோது எலிகளைப் பார்த்து முதலில் மிரண்டுபோன சஞ்சிதா, பின்னர் போகப்போக தைரியமாக நடித்துக் கொடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;