25 பெண்களுக்கு சூர்யா, ஜோதிகா உதவி!

25 பெண்களுக்கு சூர்யா, ஜோதிகா உதவி!

செய்திகள் 27-May-2015 5:49 PM IST Top 10 கருத்துக்கள்

சூர்யா தனது ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் தயாரித்த ‘36 வயதினிலே’ படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனையொட்டி இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணை புரிந்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்து. இந்த நிகழ்ச்சியில் சூர்யா, 36 வயதினிலே’ படத்தில் கதாநாயகியாக நடித்த ஜோதிகா, படத்தின் இயக்குனர் ரோஷன் ஆன்ட்ரூஸ், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், வசனகர்த்தா விஜி, ‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல் ராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இப்படத்தின் வெளியீட்டின் போது சூர்யா தனது அகரம் ஃபவுண்டேஷன் மூலம் சமூகத்தில் கஷ்டப்படும் திறமையான பெண்களை தேர்வு செய்து உதவி செய்ய இருப்பதாக அறிவித்திருந்தார்! அதன்படி உதவி பெறுவதற்காக தமிழகம் முழுக்க இருந்து நூற்றுக் கணக்கான விண்ணப்பங்கள் அகரம் ஃபவுண்டேஷனுக்கு வந்துள்ளது. அதிலிருந்து கணவனால் கைவிடப்பட்ட சில பெண்கள், திறமையிருந்தும் சமூகத்தில் முன்னேற வசதியில்லாமல் கஷ்டப்படும் பெண்கள் என 25 பெண்களை தேர்வு செய்து அவர்களுக்கு இந்நிகழ்ச்சியில் சூர்யா, ஜோதிகா இணைந்து பொருளாதார உதவிகளை வழங்கினர். சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷன் செய்யும் இந்த நலதிட்ட உதவிகளில் சக்தி மசாலா நிறுவனமும் கை கோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த உதவிகளை வழங்கி சூர்யா பேசும்போது, ‘‘இது ஒரு சிறிய ஆரம்பம் தான்! இதுபோன்ற உதவிகள் இன்னும் தொடரும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொடக்கு ஆடியோ பாடல்


;