‘அட்டகத்தி’ தினேஷுடன் இணையும் மிஸ் இந்திய அழகி!

‘அட்டகத்தி’ தினேஷுடன் இணையும் மிஸ் இந்திய அழகி!

செய்திகள் 27-May-2015 12:48 PM IST VRC கருத்துக்கள்

‘அட்டகத்தி’ தினேஷ் நடித்து வரும் படம் ‘ஒரு நாள் கூத்து’. அறிமுக இயக்குனர் நெல்சன் இயக்கும் இப்படத்தில் தினேஷுக்கு ஜோடியாக ’அமரகாவியம்’ பட புகழ் மியா ஜார்ஜ் நடிக்கிறார். கிராமத்து கதையாக உருவாகி வரும் இப்படத்தில் மியா ‘லட்சுமி’ என்ற கிராமத்துப் பெண் வேடத்தில் நடிக்கிறார். தினேஷுக்கு இப்படத்தில் இன்னொரு ஜோடியும் உண்டாம்! ஐ.டி.துறையில் வேலை செய்யும் மாடர்ன் கேர்ல் வேடமாம் அது! இந்த கேரக்டரில் துபாய் வாழ் தமிழ் பெண்ணான நிவேதா பெதுராஜ் என்பவர் நடிக்க தேர்வாகியிருக்கிறார். இவர் UAE-ல் நடந்த மிஸ் இந்தியா போட்டியில் வென்றவராம்! தினேஷ், மியா ஜார்ஜ் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாம்! இதனை தொடர்ந்து தினேஷ், நிவேதா பங்கேற்கும் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கபாலி மேக்கிங் வீடியோ


;