சிம்பு ரசிகர்களுக்கு முக்கிய செய்தி

சிம்பு ரசிகர்களுக்கு முக்கிய செய்தி

செய்திகள் 27-May-2015 12:21 PM IST VRC கருத்துக்கள்

சிம்புவின் ‘வாலு’ படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்! எஸ்.எஸ்.தமன் இசை அமைத்துள்ள இப்படத்திற்காக எஸ்.எஸ்.தமனும், சிம்புவும் இணைந்து ‘யூ ஆர் மை டார்லிங்’ என்ற ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். இந்த பாடல் உட்பட ‘வாலு’ படத்தின் அனைத்து பாடல்களும் ஏற்கெனவே ஹிட் ஆகியுள்ளன. எஸ்.எஸ்.தமன், சிம்பு இணைந்து பாடியுள்ள பாடலின் அதே ட்யூனை எஸ்.எஸ்.தமன் இசை அமைத்திருக்கும் தெலுங்கு படம் ஒன்றிலும் பயன்படுத்தியுள்ளார். கோபிசந்த் இயக்கத்தில் ராம், ரகுல்ப்ரீத் சிங் இனைந்து நடித்துள்ள ‘பண்டக செஸ்கோ’ படத்தில் தான் ‘வாலு’ பட பாடல் ட்யூன் இடம் பெற்றுள்ளது. எஸ்.எஸ்.தமன் இசை அமைத்துள்ள இப்படம் நாளை மறுநாள் (29-5-15) வெளியாகிறது. சிம்பு ரசிகர்களே கவனியுங்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - Trailer


;