சூர்யாவின் ‘மாஸ்’ கவுண்ட் டவுன் ஸ்டார்ட்!

சூர்யாவின் ‘மாஸ்’ கவுண்ட் டவுன் ஸ்டார்ட்!

செய்திகள் 27-May-2015 11:51 AM IST VRC கருத்துக்கள்

சூர்யாவின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மொத்த சினிமா ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படம் ‘மாசு என்கிற மாசிலாமணி. நாளை மறுநாள் (29-5-15) பிரம்மாண்டமான முறையில் வெளியாகவிருக்கும் இப்படத்திற்கான முன்பதிவு இன்று துவங்கியது. முன் பதிவு துவங்கிய ஒரு சில மணி நேரத்திலேயே அனைத்து தியேட்டர்களிலும் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன. இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் சூர்யாவுக்கு ரசிகர்களிடையே பெரும் மாஸ் இருந்து வருகிறது. இதனால் வெளிநாடுகளிலும் இப்படத்தை பிரம்மாண்டமான முறையில் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறது இப்படத்தை தயாரித்திருக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம். வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, ப்ரணிதா, பார்த்திபன், பிரேம்ஜி அமரன் முதலானோர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் ஏற்கெனவே வெளியாகி ஹிட் ஆகியுள்ள நிலையில் சூர்யாவின் ‘மாசு’க்கான கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகி விட்டது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;