வரிசை கட்டும் வடிவேலு, சந்தானம், விவேக்!

வரிசை கட்டும் வடிவேலு, சந்தானம், விவேக்!

செய்திகள் 26-May-2015 5:30 PM IST VRC கருத்துக்கள்

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் சூர்யாவின் ‘மாஸு என்கிற மாசிலாமணி’ வரும் வெள்ளிக் கிழமையன்று (29-5-15) வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து பெரிய ஹீரோக்கள் நடித்த படங்கள் எதுவும் ரிலீஸுக்கு தயாராகாத நிலையில் காமெடி நடிகர்கள் வடிவேலு, சந்தானம், விவேக் ஆகியோர் ஹீரோக்களாக நடித்த படங்கள் வரிசை கட்டி ரிலீசாகவிருக்கிறது. இந்த வரிசையில், வடிவேலு, சதா ஜோடியாக நடித்து, யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள ‘எலி’ படம் ஜூன் 5-ஆம் தேதி ரிலீசாகிறது. இந்த படத்தை தொடர்ந்து சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள ‘இனிமே இப்படித்தான்’ படம் ஜூன் 12-ஆம் தேதியும், விவேக் ஹீரோவாக நடித்துள்ள ‘பாலக்காட்டு மாதவன்’ ஜூன் 26-ஆம் தேதியும் ரிலீசாகவிருக்கிறது. இந்த மாதம் பெரிய ஹீரோக்களான கமல்ஹாசன் நடித்த ‘உத்தம் வில்லன்’, ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் இணைந்து நடித்த ‘புறம்போக்கு’ ஆகிய படங்களை தொடர்ந்து சூர்யாவின் ‘மாஸு என்கிற மாசிலாமணி’ படம் ரசிகர்களுக்கு சம்மர் ட்ரீட்டாக வரவிருக்கிறது. அடுத்த மாதம் காமெடி ஹீரோக்களின் படங்கள் வரிசையாக வந்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பக்கா - டிரைலர்


;