தனுஷ் பட வேலையை முடித்தார் சமந்தா!

தனுஷ் பட வேலையை முடித்தார் சமந்தா!

செய்திகள் 26-May-2015 4:54 PM IST Chandru கருத்துக்கள்

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு மீண்டும் வேல்ராஜின் இயக்கத்தில் நடிக்கிறார் தனுஷ். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன், சமந்தா என இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். தனுஷின் அப்பாவாக கே.எஸ்.ரவிகுமாரும், அம்மாவாக ராதிகா சரத்குமாரும் நடிக்கிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தனுஷ், எமி ஜாக்ஸன் சம்பந்தப்பட்ட காட்சிகள் முதல் ஷெட்யூலில் படமாக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சமந்தா, தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டு வந்தன. தற்போது அந்த ஷெட்யூலும் முடிவடைந்து விட்டது.

இதுகுறித்து நடிகர் தனுஷ் தனது ட்வீட்டில், ‘‘விஐபி டீமின் பெயரிடப்படாத படத்தின் தற்போதைய ஷெட்யூல் முடிவடைந்துவிட்டது. சமந்தாவுடன் வேலை செய்தது ஒரு ஜாலியான அனுபவம்!’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வடசென்னை’ படத்தின் நாயகியும் சமந்தாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;