நிஜ காதலர்கள் ஜோடியாக நடித்த படம்!

நிஜ காதலர்கள் ஜோடியாக நடித்த படம்!

செய்திகள் 26-May-2015 4:15 PM IST VRC கருத்துக்கள்

வரிசைக்கட்டி வந்து கொண்டிருக்கும் பேய்ப் படங்கள் மற்றும் காதல் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் ஒரு காதல் படம் உருவாகி இருக்கிறது. அந்த படம் ‘இருவர் ஒன்றானால்’. வருகிற 29ஆம் தேதி ரிலீசாகவிருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பவர் புதுமுகம் பி.ஆர்.பிரபு. கதாநாயகியாக நடித்திருப்பவரும் கிருத்திகா மாலினி என்ற புதுமுகமே! இவர்கள் படத்தில் மட்டும் காதலர்கள் இல்லை! நிஜ வாழ்க்கையிலும் காதலர்களாக இருந்து இல்லறத்தில் அடியெடுத்து வைத்த ஜோடியாவர்.

படத்தில் நடிக்கும்போது கதாநாயகன், கதாநாயகி இடையில் காதல் உருவாகி பிறகு திருமணம் செய்துகொண்டவர்கள் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். அதற்கு உதாரணமாக பாக்யராஜ் - பூர்ணிமா, பார்த்திபன் -சீதா, ராமராஜன் – நளினி, அஜித் – ஷாலினி, சூர்யா- ஜோதிகா என நிறைய பேரை சொல்ல்லாம். இப்போது அந்த வரிசையில் ‘இருவர் ஒன்றானால்’ படத்தின் கதாநாயகனும், கதாநாயகியும் இடம் பெற்று விட்டார்கள். நிஜவாழ்க்கையில் காதலர்களான இவர்கள் சினிமாவில் காதலர்களானது எப்படி என்பதை பி.ஆர்.பிரபு சொல்கிறார்.

“எனக்கு சொந்த ஊர் சேலம். வீட்டுக்கு ஒரே பையன் நான். அப்பா அட்வகேட். நான் சென்னையில் இந்துஸ்தான் கல்லூரியில் பி.இ.முடித்தேன். பிறகு அண்ணா பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. முடித்தேன். இந்தப் படிப்பு குடும்பத்தினர் திருப்திக்காகப் படித்தது. எனக்கு சினிமா ஆர்வம் உண்டு. நண்பர்கள் தொடர்பில் பல படப்பிடிப்புகளுக்கு சென்று ஒரு உதவி இயக்குநர் போல வேலைகளை இழுத்துப் போட்டு செய்ததுண்டு. இப்படி ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் பல படங்களில் வேலை பார்த்திருக்கிறேன். அப்போதுதான் இப்படத்தின் தயாரிப்பாளர் சம்பத்குமார், இயக்குனர் அன்பு.ஜி ஆகியோர் பழக்கமானார்கள்.

அவர்கள் தனியாகப் படமெடுக்க முடிவு செய்தபோது என்னை ஹீரோவாக வைத்து படம் எடுப்பது என்று முடிவு செய்தனர். ஒரு கதாநாயகி தேடிய போது நான் கிருத்திகா மாலினியை பற்றிக் கூறினேன். நேரில் பார்த்துவிட்டு தேர்வு செய்தார்கள். நான் சினிமாவுக்கு வருவது என்று முடிவெடுத்தபோது அதற்காக டான்ஸ் கற்றுக் கொண்டேன். அப்போது கிருத்திகா மாலினி அங்கு வருவார். இருவருக்கும் பழக்கமானது. ஒரு கட்டத்தில் இருவரிடையே உள்ளது வெறும் நட்பு அல்ல. ‘அதுக்கும் மேல’ என்று புரிந்து ஐலவ் யூ சொல்லிக் கொண்டோம். இதற்கே சில மாதங்கள் ஓடி விட்டன.

இப்படி காதலித்து ஆறு ஆண்டுகள் ஆன பின்புதான் சினிமாவில் ‘இருவர் ஒன்றானால்’ படத்தில் நடித்தோம். சற்றுக் காலம் கழித்து நடைமுறையில் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்று சிந்திக்க தொடங்கினோம். இருவர் வீட்டு சம்மதமும் கிடைத்தது. படப்பிடிப்பு முடிந்ததும் காதலர் தினத்தின் மறுநாள் (15.2.2015) சேலத்தில் எங்கள் திருமணம் நடந்தது”
என்றார்.

‘இருவர் ஒன்றானால்’ படம் வெளிவருவதற்கு முன்பே வாழ்க்கையில் இணைந்த காதல் ஜோடி பிரபு – கிருத்திகா மாலினி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

முப்பரிமாணம் சொக்கி போறாண்டி வீடியோ பாடல்


;