மலேசிய தமிழர்களின் ‘முத்துக்குமார் வாண்டட்’

மலேசிய தமிழர்களின் ‘முத்துக்குமார் வாண்டட்’

செய்திகள் 26-May-2015 11:00 AM IST VRC கருத்துக்கள்

மலேசிய வாழ் தமிழர்கள் சிலர் இணைந்து உருவாக்கியுள்ள படம் ‘முத்துக்குமார் வாண்டட்’. எம்.பத்மநாபன் இயக்கியுள்ள இப்படத்தில் புதுமுகங்கள் சரண், நஷிரா ஜோடியாக நடிக்க, இவர்களுடன் நிழல்கள் ரவி, ஃபாத்திமா பாபு, வி.சி.ஜெயமணி, ரோபோ சங்கர் முதலானோரும் நடித்துள்ளனர். சுந்தரா இசை அமைத்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவை மாலதி ஜெயமணி மற்றும் விஜயலட்சுமி வேல்முருகன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் சங்க தலைவர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு, ராதாரவி, கங்கை அமரன், பெப்சி சிவா, இயக்குனர் அரவிந்த ராஜ், ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் மற்றும் பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இப்படத்தின் இசை தட்டினை கங்கை அமரன் வெளியிட, பின்னணி பாடகர் நரேஷ் ஐயர் பெற்றுக் கொண்டார். டிரைலரை ராதாரவி வெளியிட, கங்கை அமரன் பெற்றுக் கொண்டார். பிறகு கங்கை அமரன் பேசும்போது, ‘‘மலேசியாவிலிருந்து வந்திருக்கும் இந்த படக்குழுவினர் இங்கு தமிழில் வெற்றிபெற வேண்டும். முன்பு மலேசியா வாசுதேவன் போன்றோர் இங்கு வெற்றி பெறுவதற்கு ரொம்பவும் கஷ்டப்பட்டார்கள். ஆனால் இப்போது தமிழ் சினிமா டிரென்ட் மாறிவிட்டது. எல்லோரும் ஜெயிப்பது கிடையாது. திறமை உள்ளவர்கள் மட்டுமே ஜெயிக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த படக் குழுவினர் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவர்கள் வெற்றிபெற்று தமிழ் சினிமாவில் தொடர்ந்து பயணிக்க வேண்டும்’’ என்று வாழ்த்தினார்.
இப்படத்தை, ‘இந்தியன் ட்ரீத் தியேட்டர்ஸ்’ நிறுவனம் சார்பில் முனியாண்டி கேசவன் மற்றும் வேல்சரவணன் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு எம்.ஜி.குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சென்னை மற்றும் மலேசியா பின்னணியில் காமெடி, த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வருகிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - டீசர்


;