கமல் படத்தில் இரண்டு வில்லன்கள்?

கமல் படத்தில் இரண்டு வில்லன்கள்?

செய்திகள் 26-May-2015 11:27 AM IST Chandru கருத்துக்கள்

‘உத்தம வில்லன்’ ரிலீஸாகி ஒருபுறம் ஓடிக் கொண்டிருக்க, இன்னொருபுறம் ‘பாபநாசம்’ படத்தை வெளியிடும் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் கமல். இதுபோதாதென்று தனது அடுத்த படமான ‘தூங்காவனம்’ படத்தின் வேலைகளிலும் மும்முரமாகி 20 வயது இளைஞனாக சுற்றிக் கொண்டிருக்கிறார் உலகநாயகன். ‘தூங்காவனம்’ படத்தின் தெலுங்கு வெர்ஷனுக்கு ‘சீக்கட்டி ராஜ்யம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர் அறிமுக விழா ஆந்திராவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் படத்தின் நாயகன் கமலுடன் நாயகி த்ரிஷாவும் கலந்து கொண்டு சிறப்பித்தார். அதோடு நடிகர்கள் பிரகாஷ் ராஜும், கிஷோரும் கலந்து கொண்டார்கள். இதனால் இப்படத்தில் இவர்கள் இருவரும் நடிப்பது உறுதியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் பிரபலமான வில்லன்களான பிரகாஷ் ராஜும், கிஷோரும் ‘தூங்காவனம்’ படத்திலும் வில்லன்களாக நடிப்பார்களா? அல்லது அவர்களுக்கு வேறெதுவும் முக்கிய வேடங்கள் கொடுக்கப்பட்டுள்ளனவா என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ்.

இதுதவிர இப்படத்தில் மனீஷா கொய்ராலா, அனைகா சோட்டி, உமா ரியாஸ்கான் ஆகியோரும் நடிக்கிறார்களாம். கமலின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அவரின் அசோசியேட் ராஜேஷ் எம்.செல்வா இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கீ - டீசர்


;