‘தல 56’-ன் அடுத்த பிளான்

‘தல 56’-ன் அடுத்த பிளான்

செய்திகள் 26-May-2015 11:00 AM IST Chandru கருத்துக்கள்

‘வீரம்’ இயக்கத்தில் அஜித், ஸ்ருதிஹாசன், லக்ஷ்மிமேனன் நடிக்கும் ‘தல 56’ படத்த்தின் படப்பிடிப்பு இந்த மாத ஆரம்பத்தில் துவங்கியது. அஜித், லக்ஷ்மிமேனன் சம்பந்தப்பட்ட இந்த முதல் ஷெட்யூலுக்கான காட்சிகள் சென்னையின் பிரபல கல்லூரி ஒன்றில் படமாக்கப்பட்டது. அஜித்தின் தங்கையாக நடிக்கும் லக்ஷ்மிமேனன் கல்லூரிக்குச் செல்ல, அவருடன் அஜித் இருப்பது போன்ற புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பின.

இந்நிலையில் ‘தல 56’ படத்திற்கான முதல் ஷெட்யூல் தற்போது முடிவடைந்துவிட்டது. இரண்டாவது ஷெட்யூல் ஜூன் முதல் வாரத்தில் துவங்க உள்ளது. இதுவரை அஜித்துடன் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாத படத்தின் நாயகி ஸ்ருதிஹாசன் இந்த 2வது ஷெட்யூலில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. லக்ஷ்மிமேனனுக்கான காட்சிகள் ஜூன் 2வது வாரத்தில் மீண்டும் ஆரம்பமாக உள்ளதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

‘வீரம்’ படத்தை முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் எடுத்த சிவா, அஜித்தின் 56வது படத்தை முழுக்க முழுக்க சிட்டி பின்னணியில் எடுக்கிறாராம். இப்படத்தின் ஃப்ளாஷ்பேக் காட்சி கொல்கத்தாவில் நடப்பதுபோல் கதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக சென்னையிலேயே செட் அமைத்து படம்பிடிக்க இருப்பதாகவும், சில அவுட்டோர் காட்சிகளுக்காக கொல்கத்தா சென்று படம்பிடிக்க இருப்பதாகவும் ‘தல 56’ வட்டாரம் தெரிவிக்கின்றது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;