ஈராஸின் இரண்டு புதிய படங்கள்!

ஈராஸின் இரண்டு புதிய படங்கள்!

செய்திகள் 26-May-2015 10:44 AM IST VRC கருத்துக்கள்

திரைப்பட உலகில் பிரபலமாக விளங்கி வரும் ‘ஈராஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனம் ஆர்.வி.ஃபிலிம்ஸுடன் இணைந்து ‘பிறை தேடிய நாட்கள்’, ‘எங்கிட்ட மோதாதே’ என இரண்டு படங்களை தயாரிக்கிறது. ‘விடியும் முன்’ படத்தை எழுதி, இணை இயக்குனராக பணியாற்றிய பிரபு ஆப்ரகாம் ‘பிறை தேடிய நாட்கள்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். காதல் கதையாக உருவாகும் இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.

அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகும் ‘எங்கிட்ட மோதாதே’ படத்தில் ‘நட்டி’ நடராஜ், (நட்ராஜ் சுபரமணியம்), ராஜாஜி, விஜய் முருகன், ராதா ரவி முதலானோர் நடிக்கிறார்கள். இப்படத்தை ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘மயக்கம் என்ன’, ‘பசங்க’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக் பணியாற்றிய ராமு செல்லப்பா இயக்குகிறார். இப்படத்தில் சஞ்சிதா ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 22-ஆம் தேதி சென்னை அருகே உள்ள அனகாப்புத்தூரில் இருக்கும் வெல்கோ திரையரங்கில் தொடங்கி, தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த இரண்டு படங்களையும் இவ்வாண்டு இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளது ஈராஸ் நிறுவனம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - நீ இன்றி பாடல் வீடியோ


;