நாளை முதல் வீர தீர சூரன்!

நாளை முதல் வீர தீர சூரன்!

செய்திகள் 26-May-2015 10:29 AM IST VRC கருத்துக்கள்

கார்த்தி நடித்த ‘சகுனி’ படத்தை இயக்கிய ஷங்கர் தயாள் அடுத்து இயக்கும் படம் ‘வீர தீர சூரன்’. இப்படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘மெட்ராஸ்’ படப் புகழ் கேத்ரின் தெரஸா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சூரியும் நடிக்கிறார். இயக்குனர் சுசீந்திரன் கதையமைப்பில் ஷங்கர் தயாள் வசனம் எழுதி இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங் நாளை (27-5-15) காலை சென்னை பெசன்ட் நகரில் உள்ள முருகன் கோவிலில் பூஜையுடன் துவங்குகிறது. தேசிய விருதுபெற்ற பட தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் பட தொகுப்பில், திவாகர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ பட புகழ் வேத் ஷங்கர் இசை அமைக்கிறார். இப்படத்தை ‘ஏ.வி.ஆர்.புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் வி.ஆர்.அன்புவேல் ராஜன் தயாரிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;