நிஜத்திலும் கல்லூரிக்குச் செல்லவிருக்கிறார் லக்ஷ்மிமேனன்!

நிஜத்திலும் கல்லூரிக்குச் செல்லவிருக்கிறார் லக்ஷ்மிமேனன்!

செய்திகள் 25-May-2015 5:10 PM IST Chandru கருத்துக்கள்

‘கும்கி’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான (முதலில் ரிலீஸான படம் சுந்தரபாண்டியன்) நடிகை லக்ஷ்மி மேனனுக்கு இப்போது 18 முடிந்து 19 வயது நடந்து கொண்டிருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் வெற்றிகரமாக பாஸ் செய்தார் லக்ஷ்மிமேனன். இப்போது +2விலும் பாஸ் செய்து விரைவில் கல்லூரிக்குச் செல்லவிருக்கிறார். இன்று சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் லக்ஷ்மிமேனனும் பாஸ் செய்திருக்கிறார். இதுகுறித்து தன் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில்...

‘‘இன்று இன்னொரு வெளியீடு. ஆனால் இது பர்சனல். ஆம்... +2 தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. என்னுடைய கடின உழைப்பிற்கு கடவுள் காட்டிய கருணையால் நான் +2வில் பாஸாகியிருக்கிறேன். என்னுடைய ஆசிரியர், குடும்ப உறுப்பினர்கள், என் நலம் விரும்பிகள் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்!’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தற்போது அஜித்திற்கு தங்கையாக ‘தல 56’ படத்தில் நடிக்கும் லக்ஷ்மிமேனன் கல்லூரிப் பெண்ணாக நடிக்கிறார். தற்போது +2 ரிசல்ட் வந்துவிட்டதால் நிஜத்திலும் விரைவில் கல்லூரிப் பெண்ணாக லக்ஷ்மிமேனன் மாறுவார் என எதிர்பார்ப்போம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

றெக்க - டிரைலர்


;