சிங்கப்பூரில் சிங்கிள்! ‘ரஜினி முருகன்’ பராக்!

சிங்கப்பூரில் சிங்கிள்! ‘ரஜினி முருகன்’ பராக்!

செய்திகள் 25-May-2015 3:26 PM IST VRC கருத்துக்கள்

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ரஜினி முருகன்’ படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைத்து வருகிறார். இமான் இசையில் இப்படத்திற்காக ‘என்னமா இப்படி பண்றீங்களேமா…’ என்ற ஒரு பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை முதலில் மதுரையில் அடுத்த மாதம் 7-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர் ‘ரஜினி முருகன்’ படக்குழுவினர்! ஆனால் இப்போது திடீர் திருப்பமாக அந்த பாடலை இம்மாதம் 29-ஆம் தேதி சிங்கப்பூர் சன் டெக் சிட்டியில் நடைபெறவிருக்கும் ஏர்டெல் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதனை ‘ரஜினி முருகன்’ படத்தை தயாரிக்கும் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனமே தெரிவித்துள்ளது. ‘ரஜினி முருகன்’ படத்தை பொன்ராம் இயக்கி வர, இப்படத்தில் சிவகர்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;