‘வட சென்னை’க்காக செப்டம்பரில் இணையும் தனுஷ், சமந்தா!

‘வட சென்னை’க்காக செப்டம்பரில் இணையும் தனுஷ், சமந்தா!

செய்திகள் 25-May-2015 12:54 PM IST VRC கருத்துக்கள்

வேல்ராஜ் இயக்கத்தில் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் நடித்த தனுஷ், மீண்டும் வேல்ராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்க, சமந்தாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் ’வட சென்னை’ படத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் துவங்கவிருக்கிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தாவே நடிக்கிறார். இப்படம் 2016-ல் தான் ரிலீஸ் ஆகுமாம்! ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகிய படங்களை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் இப்படத்திற்கான மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் தேர்வு நடந்து வருகிறது. பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘மாரி’ திரைப்படம் அடுத்த மாதம் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - டீசர்


;