சினிமா கவிஞர்களுக்கு டாக்டர் பட்டம்!

சினிமா கவிஞர்களுக்கு டாக்டர் பட்டம்!

செய்திகள் 25-May-2015 12:29 PM IST VRC கருத்துக்கள்

சர்வதேச அப்போஸ்தல பல்கலைக்கழகம் (இந்தியா மற்றும் அமெரிக்கா) கல்விப் பணி, அறப்பணி போன்ற பல்வேறு நலப்பணிகளை செய்து வருகிறது. இந்த பல்கலைக் கழகம் சார்பில் கல்வி, கலாச்சாரம், இயற்கை வளம், சமூக மேம்பாடு, எழுத்துப் பணியில் சிறந்து விளங்குபவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்கி வருகிறது. இதற்காக சமீபத்தில் சென்னையில் நடந்த விழாவில் திரைப்படப் பாடலாசிரியர்கள் ப்ரியன், அண்ணாமலை ஆகியோருக்கும் டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டது. அத்துடன் 7லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்த்த கடலூர் வனவியல் அலுவலர் சி.கொளஞ்சியப்பா, 150 நூல்கள் எழுதிய எழுத்தாளர் பி.பி.சிவசுப்ரமணியம், மனிதநேயச் சேவையாளர் பிரம்மாரெட்டி ஆகியோருக்கும் செவாலியர் வி.ஜி.சந்தோஷம் தலைமையில் நீதியரசர் டாக்டர் கே.ஞானப் பிரகாசம் முன்னிலையில் பிரதம பேராயர் கார்டினல் டாக்டர் எஸ்.எம் ஜெயக்குமார் டாக்டர் பட்டங்களை வழங்கினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை என்கிற மெட்ராஸ் - டிரைலர்


;