இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்த கவுண்டமணி!

இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்த கவுண்டமணி!

செய்திகள் 25-May-2015 11:37 AM IST Chandru கருத்துக்கள்

தமிழ்சினிமாவின் தலைசிறந்த காமெடியர்களில் கவுண்டமணியும் ஒருவர். செந்திலுடன் சேர்ந்து அவர் அடித்த காமெடிகளை மிஞ்ச இப்போது வரை இன்னொரு கூட்டணி உருவாகவேயில்லை. பல வருடங்கள் தமிழ் சினிமாவில் கோலோச்சிய கவுண்டமணி சில காலங்களாக திரைத்துறையைவிட்டு விலகியிருந்தார். இப்போது வாய்மை, 49ஓ என மீண்டும் அடுத்த ரவுண்ட்டுக்குத் தயாராகிவிட்டார்.

1939ஆம் வருடம் பிறந்த சுப்ரமணி கருப்பையா என்பவரே 1976ஆம் வருடம் கவுண்டமணியாக தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். ஆரம்பத்தில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்தவர் அதன்பிறகு மிகப்பெரிய காமெடியனாக உருவெடுத்தார். ஹீரோக்கள் பஞ்ச் டயலாக் பேசிய காலம்போய் காமெடியனான கவுண்டமணி பேசிய பஞ்ச் டயலாக்குகள் காலத்தால் அழியாமல் இன்னும் ரசிகர்களால் உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இத்தனை சிறப்புகள் வாய்ந்த கவுண்டருக்கு இன்று (மே 25) பிறந்தநாள்.

முன்னணி ஹீரோக்களின் பிறந்தநாள் என்றால் மட்டுமே ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்துக்களை வாரிக் குவிப்பார்கள். முதல்முறையாக காமெடியன் ஒருவரின் பெயர் இந்திய அளவில் இடம்பிடித்திருக்கிறதென்றால் அது கவுண்டருக்காகத்தான் இருக்கும். ஆம்... அவரின் பிறந்தநாளை முன்னிட்டு #HappyBirthdayGoundamani என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.

‘காமெடி கிங்’கிற்கு டாப் 10 சினிமாவின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விருத்தாச்சலம் - படத்தின் சிறு முன்னோட்ட காட்சிகள்


;