மீண்டும் என் ராசாவின் மனசிலே!

மீண்டும் என் ராசாவின் மனசிலே!

செய்திகள் 25-May-2015 11:27 AM IST VRC கருத்துக்கள்

24 வருடங்களுக்கு முன் ராஜ்கிரண் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘என் ராசாவின் மனசிலே’. கஸ்தூரிராஜா இயக்கிய இப்படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். இளையராஜா இசை அமைத்திருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடிக்க முடிவு செய்துள்ளார் ராஜ்கிரண். இது குறித்து ராஜ்கிரண் கூறும்போது,

‘‘24 வருடங்களுக்கு முன் வெளியாகிய ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் மாயாண்டி என்ற கேரக்டரில் நடித்திருந்தேன். என் மனைவியாக மீனா நடித்திருந்தார். முதல் பாகத்தில் நானும், மீனாவும் இறந்து விடாமல் இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதில் இருந்து இரண்டாம் பாகத்தின் கதை அமைக்கபட்டுள்ளது. எங்களுக்கு பிறந்த மகன் தான் படத்தின் இன்னொரு ஹீரோ! அந்த ஹீரோவுக்கான நடிகர் தேர்வு நடந்து வருகிறது. ‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு இளையராஜாவின் இசையும் பக்க பலமாக அமைந்திருந்தது. இரண்டாம் பாகத்திற்கும் இளையராஜா தான் இசை அமைப்பாளர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சில சமயங்களில் - டிரைலர்


;