சீனு ராமசாமி இயக்கத்தில் அதர்வா!

சீனு ராமசாமி இயக்கத்தில் அதர்வா!

செய்திகள் 25-May-2015 11:05 AM IST Chandru கருத்துக்கள்

பாணா காத்தாடி, முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இரும்புக்குதிரை என 4 படங்கள் இதுவரை அதர்வாவின் நடிப்பில் வெளிவந்திருக்கின்றன. இப்படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லையென்றாலும் அதர்வாவுக்கு சொல்லிக்கொள்ளும்படியான பெயரை வாங்கிக் கொடுத்திருக்கின்றன. குறிப்பாக பாலாவின் இயக்கத்தில் அதர்வா நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகில் பெரிய அளவில் பேசப்பட்டார். இப்போது சற்குணம் இயக்கத்தில் சண்டிவீரன், ரவி அரசு இயக்கத்தில் ஈட்டி, டி.என்.சந்தோஷ் இயக்கத்தில் ‘கணிதன்’ என 3 படங்களில் மூன்றுவிதமான கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் அதர்வா. இந்த மூன்று படங்களுமே முடியும் தருவாயில் இருப்பதால், இப்படங்களைத் தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு நடித்திருக்கும் ‘இடம் பொருள் ஏவல்’ படம் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. விரைவில் வெளியாகும் இப்படத்தைத் தொடர்ந்து அதர்வாவின் படத்தை இயக்கவிருக்கிறார் சீனு ராமசாமி. நாயகி, உடன் நடிக்கும் நடிகர்கள், டெக்னீஷியன் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளிவரும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என் ஆளோட செருப்ப காணோம் - டீசர்


;