விஜய்க்காக குரல் கொடுத்த சித்தார்த்!

விஜய்க்காக குரல் கொடுத்த சித்தார்த்!

செய்திகள் 25-May-2015 10:51 AM IST Chandru கருத்துக்கள்

பாடலாசிரியராக இருந்து நடிகராகவும் மாறியவர் கவிஞர் பா.விஜய். இப்போது ‘ஸ்ட்ராபெரி’ படத்தின் மூலம் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். இப்படத்தின் பாடல் ஒன்றை நடிகர் சித்தார்த் பாடியிருக்கிறார். சமீபத்தில் 6 மணி நேரம் செலவழித்து நடிகர் சித்தார்த் இப்பாடலைப் பாட, இசையமைப்பாளர் தாஜ்நூர் அதனை ரெக்கார்டிங் செய்திருக்கிறார். இப்பாடல் உருவான விதத்தையும் தனியாகப் படம்பிடித்து மேக்கிங் வீடியோவும் தற்போது வெளிவந்திருக்கிறது.

விரைவில் வெளிவரவிருக்கும் ‘ஸ்ட்ராபெரி’யின் இசை ஆல்பத்தை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிடுகிறார். பா.விஜய் இயக்கி, தயாரித்து, நடித்திருக்கும் காமெடி த்ரில்லரான ‘ஸ்ட்ராபெரி’ படத்தில் அவானி மோடி, சமுத்திரக்கனி, தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிரம்மாடாட்காம் - டிரைலர் 2


;