மே 29-ல் வெளியாகும் இருவர் ஒன்றானால்!

மே 29-ல் வெளியாகும் இருவர் ஒன்றானால்!

செய்திகள் 25-May-2015 10:47 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்த ஏ.எம்.சம்பத்குமார், அன்புஜி இருவரும் இணைந்து உருவாக்கியிருக்கும் படம் ‘இருவர் ஒன்றானால்’. இவர்களில் சம்பத்குமார் தான் இப்படத்தின் தயாரிப்பாளர். படத்தை இயக்கியிருப்பவர் அன்புஜி. முக்கிய கேரக்டர்களில் புதுமுகங்கள் நடித்திருக்கும் இப்படம் குறித்து தயாரிப்பாளர் சம்பத்குமார் கூறும்போது,

‘‘இந்தப் படத்தின் விளம்பரங்களில் ‘பேய் படங்கள் நடுவே ஒரு காதல் படம்’ என்று டேக் லைன் போட்டுள்ளோம். சலிப்பூட்டும் வகையிலான நிறைய பேய் படங்களை பார்த்த, போரடிக்கும் விதமான நிறைய காதல் படங்களை பார்த்த ரசிகரக்ளுக்கு இப்படம் நிச்சயம் புதுவித அனுபவமாக இருக்கும். அந்த நம்பிக்கையி8ல் தான் இப்படத்தை மே-29ஆம் தேதி வெளியிடுகிறோம்’’ என்றார். மே 29-ல் தான் சூர்யாவின் ‘மாஸு என்கிற மாசிலாமணி’ படமும் ரிலீசாகிறது.

இயக்குனர் அன்புஜி, தயாரிப்பாளர் ஏ.எம். சம்பத்குமார், நாயகன் பி.ஆர்.பிரபு, நாயகி கிருத்திகா மாலினி, ஒளிப்பதிவாளர் குமார் ஸ்ரீதர், பாடலாசிரியர் நீலமேகம், எடிட்டர் பரமேஸ்வரன், கலை இயக்குனர் பிரபு தனசேகர், டிசைனர் ரசூல் என இப்படத்தில் பணியாற்றியிருக்கும் பெரும்பாலானோரும் புதுமுகங்களே!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்பைடர் - டிரைலர்


;