‘காஷ்மோரா’ நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

‘காஷ்மோரா’ நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

செய்திகள் 25-May-2015 10:41 AM IST Chandru கருத்துக்கள்

திரையுலகில் நுழைந்து 8 வருடங்களில் 11 படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் கார்த்தி. அவரின் நடிப்பில் வெளிவந்த படங்கள் குறைவாக இருந்தாலும் பிசினஸைப் பொறுத்தவரை முன்னணி நாயகர்களின் பட்டியலில் அவர் எப்போதோ அடியெடுத்து வைத்துவிட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் கார்த்திக்கென தனி மார்க்கெட் இருக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் நடிகர்களில் கார்த்தியும் ஒருவர்.

அறிமுகப் படத்திலேயே வெள்ளி விழா கண்ட நாயகர்களில் கார்த்தி முக்கியமானவர். கார்த்தியின் கேரியரில், ஒருசில படங்கள் சறுக்கிய போதும், அதனையும் வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றி பிரியாணி, மெட்ராஸ், கொம்பன் என வரிசையாக ஹிட்களாக மாற்றி அசத்தினார். இப்போது ‘காஷ்மோரா’ படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார் கார்த்தி. அதோடு நாகார்ஜுனாவுடன் இணைந்து தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகும் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இன்று (மே 25) பிறந்தநாள் காணும் நாயகன் கார்த்திக்கு மேலும் பல வெற்றிகள் குவியட்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்தி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - Trailer


;