அஜித் படத்தில் நடிப்பதை உறுதிசெய்த ஸ்ருதிஹாசன்!

அஜித் படத்தில் நடிப்பதை உறுதிசெய்த ஸ்ருதிஹாசன்!

செய்திகள் 23-May-2015 4:27 PM IST Chandru கருத்துக்கள்

‘வீரம்’ சிவாவின் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார் என்ற செய்தியை முதன்முதலில் வெளியிட்டது நமது இணையதளம்தான். தற்போது அந்த செய்தி 100% உறுதியாகியிருக்கிறது. இதை அவரே தனது ட்விட்டர் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

‘தல 56’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையிலுள்ள பிரபல பல்கலைக்கழகம் ஒன்றில் ஆரம்பமானது. அஜித்தும், அவரின் தங்கையாக நடிக்கும் லக்ஷ்மி மேனனும் பங்குபெற்ற காட்சிகள் அங்கு படமாகிக் கொண்டிருக்கின்றன. இப்படத்தின் நாயகி ஸ்ருதிஹாசன்தான் என்பதை இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்காமலேயே இருந்தார்கள். இப்போது ஸ்ருதியே இப்படத்தில் நடிப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அவர் செய்திருக்கும் ட்வீட்டில், ‘‘அஜித் சார் அற்புதமான மனிதர் மட்டுமல்ல, நன்றாக சமைக்கவும் தெரிந்தவர். கண்டிப்பாக எனக்கு இது ஒரு அருமையான அனுபவமாக இருக்கும். சூப்பர் ஹீரோ. யம்மி!’’ என குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;