‘புலி’ ஒளிப்பதிவாளரின் அடுத்த படம்!

‘புலி’ ஒளிப்பதிவாளரின் அடுத்த படம்!

செய்திகள் 23-May-2015 4:15 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் பாண்டிராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ராமு செல்லப்பா. இவருக்கு ‘ஈராஸ்’ நிறுவன தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் ‘நட்டி’ நட்ராஜ் ஹீரோவாக நடிக்கிறார். சமீபத்தில் வெளியான ‘சதுரங்கவேட்டை’, ‘கதம் கதம்’ ஆகிய படங்க்ளை தொடர்ந்து நட்டி நட்ராஜ் நடிக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. நட்டி நட்ராஜ் தற்போது விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். ‘புலி’யின் படப்பிடிப்பு முடிந்ததும் ராமு செல்லப்பா இயக்கும் படத்தில் இணையவிருக்கிறார் நட்ராஜ். இப்படத்திற்கான கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பறந்து செல்ல வா - டிரைலர்


;