விக்ரமுடன் சண்டையா? - விஜய்மில்டன் விளக்கம்

விக்ரமுடன் சண்டையா? - விஜய்மில்டன் விளக்கம்

செய்திகள் 23-May-2015 11:41 AM IST Chandru கருத்துக்கள்

‘கோலிசோடா’ படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் ‘10 எண்றதுக்குள்ள’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் விஜய்மில்டன். ரோடு டிராவல் மூவியாக உருவாகி வரும் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். க்ளைமேக்ஸ் சண்டைக்காட்சியைத் தவிர்த்து படத்தின் மற்ற பகுதிகளுக்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்துவிட்டதாம். தற்போது எடிட்டிங் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. திங்கட்கிழமை முதல் இப்படத்தின் பின்னணி இசை வேலைகளில் இறங்கவிருக்கிறார் டி.இமான்.

இந்நிலையில் நடிகர் விக்ரமுக்கும், இயக்குனர் விஜய் மில்டனுக்கும் உரசல் ஏற்பட்டிருப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது. அந்தச் செய்திக் குறிப்பை ஸ்கேன் செய்து தன் ட்விட்டரில் வேடிக்கையாக பதிவேற்றம் செய்திருந்த விஜய்மில்டன் இந்த விவகாரம் குறித்தும் கருத்துத் தெரிவித்திருக்கிறார். ‘‘என்னால் விக்ரம் சாருடன் சண்டை போட முடியாது. என் கைகளைவிட அவருடைய கைகள் ரொம்பவும் பெரிது. முருகதாஸ் சாருடன் வேண்டுமானால் சண்டை போட முயற்சிக்கிறேன்!’’ என விளையாட்டாக குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;