‘மாஸ்’ பட டைட்டில் திடீர் மாற்றம்!

‘மாஸ்’ பட டைட்டில் திடீர் மாற்றம்!

செய்திகள் 23-May-2015 11:17 AM IST Top 10 கருத்துக்கள்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ‘மாஸ்’ படம் வரும் 29ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் பாடல்களும், டீஸரும் வெளியாகி ரசிகர்ளிடத்தில் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதோடு படத்திற்கு சென்சாரில் யு சான்றிதழும் கிடைத்தது. பொதுவாக ஹாரர் படங்களுக்கு ஏ அல்லது யு/ஏ சான்றிதழ்தான் வழங்கப்படும். ஆனால் ‘மாஸ்’ படம் குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் பார்க்கும் வகையில் இருப்பதால் யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாம்.

படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து வரிச்சலுகையும் பெறுவதற்காக ‘மாஸ்’ படத்தின் டைட்டில் ‘மாஸ் என்கிற மாசிலாமணி’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. படத்தில் சூர்யாவின் கேரக்டர் பெயர் மாசிலாமணி. அதை சுருக்கி மாஸ் என்று அழைக்கப்படுவாராம். இதனால்தான் படத்திற்கு முதலில் ‘மாஸ்’ என டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. மாறிய டைட்டிலுடன் கூடிய புதிய போஸ்டர்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;