தன்ஷிகாவுக்கு பெருமை தந்த படம்!

தன்ஷிகாவுக்கு பெருமை தந்த படம்!

செய்திகள் 22-May-2015 11:21 AM IST VRC கருத்துக்கள்

தன்ஷிகா, அறிமுக நாயகன் வீரவன் ஸ்டாலின், நாராயண் மற்றும் அஞ்சனா கீர்த்தி ஆகியோரது நடிப்பில் இன்று ரிலீசாகியுள்ள படம் ‘திறந்திடு சீசே’. சுதாஸ் புரொடக்ஷன் சுதா வீரவன் ஸ்டாலின் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய நிமேஷ்வர்ஷன் இயக்கியுள்ளார். இந்த படம் குறித்து தன்ஷிகா கூறும்போது,

“உண்மை சம்பவங்களை அடிப்படியாக கொண்டு அமைத்திருந்த கதையமைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படத்தில் நான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ‘சார்மி’ என்ற பாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தக் கதையைக் கேட்ட மாத்திரத்தில் எனக்கு இந்தக் கதாப்பாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. அதே நேரம் இந்தக் கதாபாத்திரத்தில் என்னால் சிறப்பாக நடிக்க முடியுமா என்ற ஐயமும் இருந்தது. ஆனால் இப்போது படத்தை பார்த்த அனைவரும் என்னை பாராட்டுவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது. பெண்ணுக்கும் அவளது உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ‘திறந்திடு சீசே’ படத்தில் நடித்தது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உரு - டிரைலர்


;