சுரேஷ் கோபிக்கு மத்திய அரசு பதவி?

சுரேஷ் கோபிக்கு மத்திய அரசு பதவி!

செய்திகள் 22-May-2015 10:17 AM IST VRC கருத்துக்கள்

பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி. இவர் ‘தீனா’, ‘ஐ’ உட்பட பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவரை மத்திய அரசு தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகத்தின் தலைவராக நியமிக்க தீர்மானித்துள்ளது. இது சம்பந்தமாக சமீபத்தில் சுரேஷ்கோபி டெல்லி சென்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, செய்தி ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோட் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். இது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. அதனை தொடர்ந்து சுரேஷ்கோபி இந்த பதவியை ஏற்க உள்ளார். தற்போது இந்த பதவியில் பிரபல ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர் ரமேஷ் சிப்பி உள்ளார். இவர் கடந்த 2012-ல் இருந்து இந்த பதவியை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதவி மத்திய இணை அமைச்சர் பதவிக்கு இணையான பதவியாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செம போத ஆகாதே - டிரைலர்


;