நாளை முதல் ஆந்திரா, கர்நாடகாவில் ‘என்னை அறிந்தால்’

நாளை முதல் ஆந்திரா, கர்நாடகாவில் ‘என்னை அறிந்தால்’

செய்திகள் 21-May-2015 4:15 PM IST Chandru கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அருண் விஜய், அனுஷ்கா, த்ரிஷா, விவேக் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் தமிழில் பிப்ரவரி 5ஆம் தேதி வெளியானது. வித்தியாசமான கூட்டணியில் அமைந்த இப்படம் தமிழில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து தெலுங்கிலும் வெளியாகும் என அப்போதிருந்த எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சரியான ரிலீஸ் தேதி கிடைக்காததால் இப்படத்தின் தெலுங்கு டப்பிங் வெளியீடு தள்ளிக் கொண்டே போனது. ஒருவழியாக கடந்த வாரம் இப்படத்திற்கு ரிலீஸ் தேதி குறிக்கப்பட்டது.

‘எந்தவாடுகானி’ (யாரா இருந்தா எனக்கென்ன) என்ற பெயரில் தெலுங்கில் ரிலீஸாகும் என்னை அறிந்தால் படத்திற்கு 100க்கும் அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாம். ஆந்திராவில் மட்டுமல்லாமல் கர்நாடகாவிலும் இப்படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது. அஜித் படங்களிலேயே தெலுங்கில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் படம் இதுதானாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;