விஜய்க்கு ஃபேவரைட்டான ‘டிமான்ட்டி காலனி’ இயக்குனர்!

விஜய்க்கு ஃபேவரைட்டான ‘டிமான்ட்டி காலனி’ இயக்குனர்!

செய்திகள் 21-May-2015 3:37 PM IST Chandru கருத்துக்கள்

அருள்நிதி நடித்திருக்கும் பேய்ப்படமான ‘டிமான்ட்டி காலனி’ திரைப்படம் நாளை ரிலீஸாகிறது. இப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர். ஏற்கெனவே பல ஏ.ஆர்.முருகதாஸிடம் வேலை பார்த்த பல உதவி இயக்குனர்கள் இயக்குனர்களாக மாறி இருக்கிறார்கள். அந்த வகையில் தன்னிடம் வேலை பார்த்த அஜய் ஞானமுத்துவும் இயக்குனராகியிருப்பதால் ட்வீட் மூலம் அவரை வாழ்த்தியிருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

அந்த ட்வீட்டில், ‘‘டிமான்ட்டி காலனி மூலம் இயக்குனராக அறிமுகமாகும் அஜய் ஞானமுத்துவுக்கு என் வாழ்த்துக்கள். அவர் என்னிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர் மட்டுமல்ல, அவரை விஜய் சாருக்கும் ரொம்பப் பிடிக்கும்!’’ என குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;