கவிஞர் வாலியின் கடைசி படம்!

கவிஞர் வாலியின் கடைசி படம்!

செய்திகள் 21-May-2015 1:09 PM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் 40 ஆண்டு கால அனும்பவம் உள்ளவர் அ.செ.இப்ராகிம் ராவுத்தர். தனது ‘இராவுத்தர் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் 32 படங்களை தயாரித்துள்ளார் இவர். இவரது தயாரிப்பில் விரைவில் ரிலீசாகவிருக்கும் படம் ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’. இயக்குனர்கள் மாதேஷ், பிரபு சாலமன் ஆகியோரிடம் உதவியாளராக இருந்த தம்பி செய்யது இப்ராகிம் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். பின்னணி பாடகர் க்ரிஷ், சிருஷ்டி டாங்கே ஜோடியாக நடித்திருக்கும் இப்படம் குறித்து இயக்குனர் தம்பி செய்யது இப்ராகிம் கூறும்போது,

‘’மதுரை பின்னணியில் சொல்லப்படும் ஆக்‌ஷன் கலந்த காதல் கதை இது. கவிஞர் வாலி கடைசியாக எழுதிய பாடல் இப்படத்திற்காக தான்! அதுவும் மரணம் சம்பந்தட்ட ஒரு பாடல்! இந்த கதையை முதலில் வாலி ஐயாவிடம் சொல்லியிருந்தேன். அவர் கதையை கேட்டதும், ‘இந்த கதையை தயாரிக்க இப்ராகிம் ராவுத்தர் தான் பொருத்தமானவர்! அவரிடம் போய் கதையை சொல்லு’’ என்று என்னை அவரிடம் அனுப்பி வைத்தவர் வாலி ஐயா தான்! இன்று அவர் இல்லை என்று நினைக்கும்போது கஷ்டமாக இருக்கிறது.

இப்படத்திற்கு ரைஹானா சேகர் இசை அமைத்துள்ளார். இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி என்பது எல்லோருக்கும் தெரியும். ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரை கெடுக்காத வகையில் இப்படத்திற்காக அருமையான பாடல்களை தந்துள்ளார் அவர். வித்தியாசமான ஒரு களத்தில் சொல்லப்படும் இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும். இந்த கதைக்கு க்ரிஷ் தான் பொருத்தமாக இருப்பார் என்று அவரை இப்படத்தில் நடிக்க வைத்தவர் தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர் தான். அவர் நிறைய கலைஞர்களை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர்! அவர் கணக்கு தப்பாது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எங்க காட்டுல மழை - டிரைலர்


;